மு.கா வசமிருந்த கிண்ணியா பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி...
கிண்ணியா பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கால் தோல்வியடைந்துள்ளத. இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக 8 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனா்.
இன்று (24) காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமே இவ்வாறு தோல்வி அடைந்தது.
கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் கே.எம்.நிஹார் (SLMC) தலைமையின் கீழ் சபை அமர்வு நடைபெற்றது
மொத்தம் 16 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் கிண்ணியா பிரதேச சபையில், நேற்றைய தினம் 15 உறுப்பினர்கள் மாத்திரமே சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தனா்.
ஒருவர் சுகயீனம் காரணமாக கலந்து கொள்ளவில்லை என்பதுடன்(அவர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த கட்சியைச் சேர்ந்த, சாரிபு லெப்பை) ஆதரவாக 7 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்திருந்தனா்.