சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் : மாற்றுத் திறனாளிகள் அமைப்பால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான 2014ம் ஆண்டு அரசு தயாரித்த தேசிய செயற்திட்டத்தை அமுல்படுத்துமாறு வழியுருத்தி மாற்றுத் திறனாளிகள் அமைப்பால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று 03ம் திகதி இடம் பெற்றது.
திருகோணமலை 3ம் கட்டை சந்தியில் வெக்கோ மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அதிகமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது.
திருகோணமலை மாவட்டத்தில் 04 பிரதேச செயலகப் பிரிவுககளான பட்டணமும் சூழலும் திருகோணமலை , குச்சவெளி, வெருகல்,மற்றும் கந்தளாய் ஆகிய இடங்களில்
ஒரே நேரத்தில் காலை 9.30 மணிக்கு இந்த போராட்டம் ஆரம்பித்து நடைபெற்றது.
இதன் போது பதாதைகள் ஏந்தியிருந்த மாற்றுத் திறனாளிகள் அப்பதாதைகளில் இவ்வாறான வாசகங்கள் எழுதப்பட்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.
மாற்றுத் திறனாளிகளின் தொழில் உரிமையை பாதுகாப்போம்..மாற்றுது் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவோம்...3 % அரச தொழில் வாய்ப்பை உறுதிசெய்வோம்....அரசே மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட அடையாள அட்டையை வழங்குங்கள்...பொது கட்டிடங்களுக்கான அனுகும் வசதிகளை ஏற்படுத்துங்கள்...சைகை மொழி தெரிந்த அலுவலர்களை சேவைக்கு அமர்த்துங்கள்..மாற்றுத் திறனாளிகளுக்கான சுகாதார சேவைகளை உறுதிப்படுத்துங்கள்...மாற்றுத் திறனுடைய மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம்..
அதே வேளை இக் கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
இன்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம்.
அதிகமானவர்களுக்கு மாற்றுத் திறனாளிகளை நினைவுக்கு வருவது மார்கழி 03ம் தினத்தில் மாத்திரம் ஆயினும் 2012ம் ஆண்டு சனத்தொகை மற்றும் குடும்ப கணக்கெடுப்பு விபரத்திற்கு ஏற்ப எமது நாட்டின் சனத்தொகையில் 8.7 வீதம் மாற்றுத் திறனாளிகளே.
அவ்வாறானவர்கள் 1617924 பேர் உள்ளனர்.இவர்களில் 55 வீதமானனோர் 19- 55 வயதிற்கு இடைப்பட்டவர்கள் (உழைக்கும் சமூகம்) இதில் உள்ளடங்குகின்றனர். அதே போன்று எதிர்வரும் காலத்தில் எமதுநாட்டில் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் உழைக்கும் சமூகம் குறைவடையும். அதே போன்று தொற்றா நோய்கள் அதிகரிக்கும் அதாவது மென்மேலும் மாற்றுத் திறனுடையவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் இவ்வாறான அனைத்து காரணங்களையும் ஆராய்ந்து பார்க்கும் போது எமது நாடென்ற வகையில் பாரிய சவால்கள் உள்ளது . எனவே அச் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு மாற்றுத் திறனாளிகளை வலுத்துவது அணைவரின் பொறுப்பாகும்.
” உரிமையை புறக்கணித்து தினத்தை கொண்டாடும் சமூகத்தில்
மாற்றுத்திறனுக்கான தேசிய செயற்பாட்டுக் திட்டத்தை அமுல்படுத்த பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு விழிப்புணர்வு செய்ய நாம் அணைவரும் ஒன்றுபடுவோம்”. என தெரிவித்தனர்.