Header Ads

Breaking News
recent

எல்லை நிர்ணய ஆணைக்குழு சிபாரிசு செய்த பட்டித்திடல் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்...

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலத்தடிச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த மக்கள் மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (06) சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலத்தடிச்சேனை தனி கிராம உத்தியோகத்தர் பிரிவை பட்டித்திடல் கிராம உத்தியோகத்தர் பிரிவோடு இணைத்து பட்டித்திடல் எனும் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவாக உருவாக்குவதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது தமது கிராம பாலத்தடிச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவை இல்லாமல் செய்ய வேண்டாம், பட்டித்திடல் கிராம உத்தியோகத்தர் பிரிவோடோ இணைக்க வேண்டாம்.ஏற்கனவே இருந்த தனி கிராம உத்தியோகத்தர் பிரிவு போன்று தனியான கிராம சேவையாளர் பிரிவாக இருப்பதற்கு ஆவணம் செய்யுமாறு தெரிவித்தே பாலத்தடிச்சேனை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த மூதூர் பிரதேச செயலாளர் M.B.M.முபாரக் அவர்களிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.






Powered by Blogger.