குறிஞ்சாக்கேணி இழுவைப் படகு கவிழ்ந்ததில் கைது செய்யப்பட்ட நகர சபை தலைவர் நாளை வரை விளக்கமறியல்...
(அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவைப் படகு கவிழ்ந்ததில் கைது செய்யப்பட்ட நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.நளீமை நாளை 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (09) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கிண்ணியா நகர சபை தலைவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனை கருத்தில் கொண்டு பிணை வழங்குமாறு சட்டத்தரணி சார்பில் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.