திருமலையில் யுத்தத்தினால் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற போர்வீரர்களின் குடும்பங்களுக்கு காசோலைகள் வழங்கிவைப்பு : கபில நுவன் அத்துகோரள
திருகோணமலை மாவட்டத்தில் யுத்தத்தினால் உயிரிழந்த ஊனமுற்ற போர்வீரர்களின் போர்வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடப்பெற்றது
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கபில நுவன் அத்துகோரள அவர்களினால் இன்று (22) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது
33 போர்வீரர்களின் குடும்பங்களுக்கு 5.5 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டது.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கருத்துருவின் பிரகாரம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் "விரு சுமித்துரு" திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த வீடுகளின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி போரினால் உயிர் தியாகம் செய்து காயங்களுக்குள்ளான போர்வீரர்களின் தேவைகளை உணர்ந்து இவ்வாறான பணியை முன்னெடுத்த தற்போதைய அரசாங்கத்திற்கு போர்வீரர்களின் குடும்பங்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், மாவட்ட முகாமையாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, திருகோணமலை. ஹேமகுமார மற்றும் ஏனைய போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.