சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் : இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்...
நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் அடைய நினைப்பதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று (03) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தி விஜயம் ஒன்றினை மேற்க்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது
நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கையினை முன்னெடுக்க தயாராகி வருகிறது ஏனென்றால் மக்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகிறது எந்தவொரு விடயத்தினையும் அரசாங்கம் அனுமதிக்காது எனவும் எதிர்க்கட்சியினர் இவ்வாறான சம்பவங்கள் அரசியல் மயப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்
மேலும் தமிழ் மொழி பாடசாலைகளில் மாணவர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் வாரத்தில் ஒரு நாள் தமிழ் பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும் செயற்ப்பாடு உடை முதல் ஏனைய செயற்பாடுகள் முன்னெடுக்குமாறும் கிழக்கு மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் திருமதி பிள்ளை நாயகம் அவர்களிடம் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்
மேலும் கிழக்கு மாகாணத்தின் பல பாடசாலைகளை தரமுயர்த்துமாறு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்
இவ் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் குழுவினர்,பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண கல்வி பணிமனையின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.