Header Ads

Breaking News
recent

புதிய கோப்பி அறிமுகம்...


இலங்கையின் முன்னணி நிறுவனமான மலிபன் பால் மா நிறுவனத்தின் புதிய உற்பத்தியான மலிபன் கோப்பி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது

கடந்த (01) புதன்கிழமை திருகோணமலை வில்லா சுற்றுலா விடுதியில் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான வணிக மேம்பாட்டு முகாமையாளர் ஜே.பிரதீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் மெலிபன் பால் மா நிறுவனத்தின் புதிய உற்பத்தியான மெலிபன் கோபி அறிமுகம் செய்யப்பட்டதுடன் நாட்டின் 60 வருடத்திற்கு மேலான மக்களின் நன்மதிப்பை வென்ற மெலிபன் குடும்பத்தின் தலைசிறந்த ஒரு உற்பத்தி பொருளை பாவனையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் நாட்டின் கோப்பி உற்பத்தியில் பெயர் பெற்ற நுவரேலியா,பதுளை மற்றும் வெளிமட பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படும் தெரிவுசெய்யப்பட்ட கோப்பிகளினால் தயாரிக்கப்பட்ட மெலிபன் கோப்பி பவுடர்களை மக்கள் கொள்வதற்காக இன்றைய தினம் அறிமுகம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது

மேலும் இவ் கோப்பி பவுடர் சர்வதேச தரத்தில் மெலிபன் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட உள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது

எதிர்வரும் 4ஆம் திகதி முதல் நாட்டில் எந்த ஒரு சில்லறை கடைகளிலும் இன்றையதினம் அறிமுகம் செய்யப்படும் மெலிபன் கோப்பியினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் மெலிபன் பால் மா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளினால் ஸூம் தொல்நூட்பத்தினுடாக வடக்கு கிழக்கு விற்பனை பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன்

இவ் அறிமுக விழாவில் மலிபன் பால்மா நிறுவனத்தின் வடக்கு கிழக்கு மாகாண வணிக மேம்பாட்டு முகாமையாளர் ஜே.பிரதீபன்,கிழக்கு மாகாண பகுதி விற்பனை நிர்வாகி எம்.ஆர்.எம்.பாயிஸ் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண அனைத்து விற்பனை பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















Powered by Blogger.