பேருவளை - பயாகல பகுதிகளுக்கு இடையே திடீரென தரையிறக்கப்பட்ட விமானம்...
பயாகல மற்றும் பேருவளை ஆகிய நகரங்களுக்கு இடையில் இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், விமானத்தில் பயிற்றுவிப்பாளர் ஒருவரும், மாணவர் ஒருவரும் இருந்துள்ளதாக தெரிய வருகின்றது.
மீட்புப் பணிகளுக்காக விமானப்படை குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவத்தில் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் கூறுகின்றார்.