Header Ads

Breaking News
recent

பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலையின் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றான கரடிப்பூவல் கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு

நேற்று (25) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப-தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களினால் பலர் பாடசாலையின் நிர்வாகத்தினரிடம் இவ் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டது

திருவள்ளுவர் பாலர் பாடசாலையின் நிர்வாகத்தினர்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்களினால் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப-தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களிடம் எழுத்து மூலமான கோரிக்கை விடுத்ததினை அடுத்து இவ் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது

இந்நிகழ்வில் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் நிர்வாகிகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.