ஐக்கிய இராஜ்ஜிய உயர்ஸ்தானிகருடன் ஹாபிஸ் நசீர் அஹமட் (எம்.பி) சந்திப்பு...
ஐக்கிய இராஜ்ஜியத்திற்கான இலங்கைய்தூதுவர் ஷாராஹ் ஹல்டன் (Sarah Hulton OBE) இன்று மட்டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம் செய்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களை சந்தித்து இலங்கையின் சமகால நிலைமைகள் தெடர்பாக விரிவாகக் கலந்துரையாடினர்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இச்சந்திப்பிற்கு வருகை தந்தமைக்கு தூதுவருக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கை உற்பட உலகலாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால் பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகளில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடியதோடு, மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதாரத் தாக்கங்களை பாராளுமன்ற உறுப்பினர் பிரித்தானிய தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.
இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்ற காணி அபகரிப்பு, பிரதேச செயலக எல்லை நிர்ணயம் மாற்றங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியோதோடு, அது தொடர்பிலான ஆவணங்களும் பிரித்தானிய தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.