பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு...
திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 174 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் இந் நிகழ்வு இடம் பெற்றது.
covid-19 காரணமாக கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டிருந்த 174 தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடம் இதன்போது உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
முஸ்லிம் எயிட் யூகே தலைமையகத்தின் பிரதான நிறைவேற்று அலுவலர் ஜனாப் காசிப் சாபீர், முஸ்லிம் எயிட் சர்வதேச நிகழ்ச்சித்திட்ட தலைமை பொறுப்பாளர் அபு அக்கீம், மற்றும் முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா பணிப்பாளர் பைசர் கான் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.