LPL இறுதிப் போட்டிக்கு ஜப்னா கிங்ஸ் அணி தகுதி...
நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் T20 2021 க்கான இறுதிப் போட்டிக்கு ஜப்னா கிங்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தம்புள்ள அணியை தோற்கடித்தே ஜப்னா கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்களைப் மட்டுமே பெற்றது.