வடமராட்சியில் மினிசூறாவளி : 18 குடும்பங்கள் பாதிப்பு....
வடமராட்சி கரணவாய் பகுதியில் சற்று முன்னர் மினி சூறாவளி ஏற்பட்டதன் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த மணியகாரன் தோட்டம் பகுதியில் வசிக்கும் மாணிக்கம் நாகநாதன் என்பவரின் முன்னாள் வீட்டின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தினர் புதிதாக வீடு அமைக்கப்பட்டு அதில் வசித்ததால் எவருக்கும் காயம் ஏற்படற்படவில்லை.
அத்துடன் குமரிதோட்டம் பகுதியில் 5 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதாகவும், மற்றும் கரணவாய் மகா வித்தியாலய கூரையும் பாதிக்கப்பட்டுள்ளதாம்
அத்துடன் கரணவாய் மத்தி ஜெ 50 கிராம அலுவலகர் பிரிவில் பலா மரங்கள், வாழை போன்ற மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், மூத்த விநாயகர் சந்தையில் உள்ள கடை ஒன்றின் தகரத்திலான கூரை சேதமடைந்துள்ளது.
மினி சூறாவளி வீசியதில் 18 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது...