Header Ads

Breaking News
recent

மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 26 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி....



எம்.அம்ஜத் 

திருகோணமலை-மட்டக்களப்பு  பிரதான வீதி பட்டித்திடல் பகுதியில் லொறி  மற்றும் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 26 பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்விபத்து இன்று (10) காலை இடம்பெற்றுள்ளது.


அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான பஸ்ஸும் மூதூரிலிருந்து 

சேறுவில நோக்கி சென்று கொண்டிருந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.


இதில் அதிகளவில் அரச உத்தியோகத்தர்கள் வருகை தந்ததாகவும் இதுவரைக்கும் 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


டிப்பர் வாகனத்தின் சாரதியின் கால்கள் உடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

















Powered by Blogger.