இலங்கைக்கு படை எடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் : 39172 வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் இலங்கைக்கு வருகை.
2022 ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை 39172 வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனா்.
இதில் ரசியாவில் மட்டும் 6963 சுற்றுலாப்பிரயாணிகள் கூடுதலாக வருகை தந்துள்ளனா்.
இந்தியா. மாலைதீவு, அவுஸ்திரேலியா யுக்ரைன், போலந்து ஆகிய நாடுகளிலிருந்தும் இவ்வருடம் சுற்றுலாவினை கழிக்க இலங்கை வந்துள்ளனா்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொவிட் 19 காரணமாக இத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
இவ் வருடம் சுற்றுலாத்துறை மேலும் முன்னேற்றம் காணப்படஉள்ளதாக சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவா் தெரிவித்தாா்.