திருமலையில் மூன்று இடங்களில் விபத்தை ஏற்றப்படுத்தி தப்பிச்செல்ல முற்றப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி : அறுவர் படுகாயம்...
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலையில் ஒரே முச்சக்கர வண்டி மூன்று இடங்களில் விபத்தை ஏற்றப்படுத்தி தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் மின் கம்பம் ஒன்றுடன் மோதியதில் அறுவர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
திருகோணமலை தலைமையக பொலீஸ் பிரிவுக்குட்பட்ட நகர பகுதியில் நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளது
விபத்து தொடர்பில் தெரியவருவதாவது
நேற்று இரவு 7மணியளவில் திருகோணமலை டொக்யார்ட் வீதியில் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக நடந்து சென்ற ஒருவர் உடன் மோதி அங்கிருந்து தப்பிச்சென்று மீண்டும் திருகோணமலை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்களில் பயணித்த மூவருடன் மோதியதில் முச்சக்கர வண்டி கவிழ்ந்துள்ளது பின்னர் பொதுமக்களினால் முச்சக்கரவண்டியில் நிமிர்த்தி அதன் பிற்பாடு அங்கிருந்து தப்பிச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதி திருகோணமலை பிரதான வீதியில் மின் கம்பம் ஒன்றுடன் மோதிய நிலையில் பொதுமக்களினால் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்
இவ்விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவ் விபத்தின் போது வீதியால் நடந்து சென்ற அன்புவலிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 56வயதுடைய வயோதிபர் ஒருவர் காயபட்டுள்ளதுடன் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியின் சாரதியான பாலமுருகன் (24 வயது) என்பவரும் படுகாயமடைந்துள்ளதுடன் இவ்வாறு விபத்துக்குள்ளானவர்கள் (06,29,26 மற்றும் 18 வயதுடையவர்கள்எனவும் இவ்வாறு படுகாயமடைந்த அறுவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்
விபத்து தொடர்பில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.