மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் படுகாயம்..
ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை-கந்தளாய் பிரதான வீதி சாலியபுர சத்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்றிரவு (23) 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் கந்தளாய்,கந்தலாவ பகுதியைச் சேர்ந்த சானுக்க தனபால (35 வயது) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே படுகாயமடைந்துள்ளார்.
மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பொலிஸ் உத்தியோகத்தர் மூவரை ஏற்றி வந்ததாகவும் குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.