Header Ads

Breaking News
recent

நாளை முதல் மீண்டும் முடங்குகிறது - சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்...



சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை (03) முதல் தற்காலிகமாக மீண்டும் மூடப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை "எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில" அண்மையில் வெளியிட்டிருந்தாா்.

அந்நிய செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்து மசகு எண்ணெயை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை (03) மூடப்படவுள்ளது.

எவ்வாறாயினும், தேவையான மசகு எண்ணெயை பெற்று ஜனவரி 30 ஆம் திகதிக்கு முன்னர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.