கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்பு...
முல்லைத்தீவு மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் கிணற்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்க்கப்பட்ட இளைஞர் ஒருவர் அவரின் வீட்டு வளவில் உள்ள கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மல்லாவி தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த கணேசன் 23 வயதுடைய புஷ்பராஜ் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கொலையா ?தற்கொலையா என்ற பார்வையில் மல்லாவி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.