ஹொரவ்பொத்தான நகரில் விவசாயிகள் பாரிய போராட்டம்.
முஹம்மட் ஹாசில்
இழந்த உர மானியத்தை மீளப் பெற்றுத் தருமாறும், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இயற்கை உர பாவனையினால் சேதமடைந்த சகல பயிர்களுக்கும் இழப்பீடு வழங்குமாறு கோரியும் இன்று(19) பிற்பகல் ஹொரவ்பொத்தான நகரில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.