Header Ads

Breaking News
recent

திருகோணமலை பொது வைத்தியசாலை இடமாற்றம் : விழிப்புணர்வுடன் செயற்படுவதற்கும் எதிர்ப்பினை வெளியிடவும் பொதுமக்கள் ஒன்றிணைய வேண்டும்...



ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை பொது வைத்திய சாலையின் இருதய சிகிச்சை மையமானது வைத்திய சாலை வளாகத்திலல்லாது பிறிதொரு இடத்தில் அமைக்கப்பட அரசால் முன்னெடுக்கப்படும் திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாள்ர் காலாநிதி ஶ்ரீ ஞானேஸ்வரன் திருகோணமலை ஊடக இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையினை இடம் மாற்றப் போவதாக காரணம் காட்டி ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2.2 பில்லியன் பெறுமதியான இருதய மருத்துவ பிரிவினை இடை நிறுத்தும் செயல்திட்டமே இவ்வாறு முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்

திட்டமிட்டு இருதய மருத்துவ பிரிவினை அமைக்க விடாது செய்வதற்கான செயல்திட்டம் ஆளுநர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரால் இடம்பெறுவதாக குற்றம் சாட்டிய அதே வேளை.


அவ்வாறு வைத்திய சாலை ஓரிடத்திலும் இருதய சிகிச்சை மையம் இன்னோரிடத்திலும் அமையும் போது பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாக நேரிடும் என்பதுடன் அங்கு வைத்தியசாலை முற்றாக மாற்றப்படுமாயின் அதற்கு பல வருட காலங்கள் ஏற்படும் என அவர் தெரிவித்தார்.


இது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுவதற்கும் எதிர்ப்பினை வெளியிடவும் பொதுமக்கள் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
Powered by Blogger.