Header Ads

Breaking News
recent

வெற்றியை தனதாக்கியது திருமலை லயன்ஸ் அணி...

அலுவலக செய்தியாளர் - நசீம்
ரத்மலை kings XI மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கி கொண்டது திருகோணமலை லயன்ஸ் விளையாட்டுக்கழகம்


திருகோணமலை ரத்மலை ரஹ்மானியா இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு எட்டுப்பேர் கொண்ட ரத்மலை kings XI மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி மூன்றாவது நாளாக இன்று(17) ரத்மலை முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.




மட்டுப்படுத்தப்பட்ட நான்கு ஓவர்களைக்கொண்ட இவ் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 24அணிகள் பங்குபற்றியதுடன்




இன்றைய தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை லயன்ஸ் அணியினர் நான்கு ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 35 ஓட்டங்களை பெற்றிருந்தது




பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அக்கர சீய அணியினர் நான்கு ஓவர்கள் முடிவில் 25 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுகளை இழந்து துரதிஷ்டவசமாக தோல்வியடைந்தனர்.




இச்சுற்றுப்போட்டியில் ஆட்ட நாயகனாக திருகோணமலை லயன்ஸ் அணியின் நட்சத்திர விளையாட்டு வீரர் நாசர் தெரிவு செய்யப்பட்டதுடன் வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் சாம்பியன் அணிக்கு ரூபா25000 இரண்டாம் நிலை அணிக்கு ரூபா 15000 பணப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







Powered by Blogger.