சௌபாக்கிய தெக்ம வேலைத் திட்டத்தின் பொலிஸாரின் சிரமதான பணி...
திருகோணமலை-மொரவெவ பொலிஸ் நிலையத்தினால் சௌபாக்கிய தெக்ம வேலைத்திட்டத்தின் கீழ் மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் உள்ள பிரதான வீதியை சுத்தப்படுத்தும் பணிகள் இன்று (23) நடைபெற்றது.
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் மஹதிவுல்வெவ குளம் அமைந்துள்ளது.
இவ்வீதியின் ஊடாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் அக்குளத்தில் நீராடி செல்வதுடன் உணவு உட்கொண்டுவிட்டு கழிவுகளை வீசுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு கோமரங்கடவல- தம்பலகாமம்-மொரவெவ பிரதேசத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி அகில கருணாரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த சந்ரலால் அவர்களின் வழிகாட்டலுடன் இச்சிரமதானம் இடம்பெற்றது.
இதில் பிரதான வீதி இரு பக்கங்களையும் பொலிஸார் துப்பரவு செய்ததுடன் மரங்களையும் இதன் போது நாட்டி வைத்தனர்.