Header Ads

Breaking News
recent

திருகோணமலை நகரின் தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில்..

ADMIN
திருகோணமலை நகரை அண்டிய தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

நேற்று (05) இரவு தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக திருகோணமலை நகரை அண்டிய பெரும்பாலான தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

திருகோணமலை நகரை அண்டிய மட்கோ,பாலையூற்று,ஜமாலியா,லவ் லேன்,செல்வநாயகபுரம் மற்றும் பல்லத்தோட்டம் ஆகிய பிரதேசங்களில் உள்ள தாமழை வெள்ள நீரினால் அப்பிரதேச மக்களின் அன்றாட செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு தாழ்நிலப் பிரதேசத்தை அண்டிய விதிகள் சில புனரமைக்கப்படாமலும் மேலும் சில விதிகள் புனரமைக்கப்பட்ட போதிலும் சரியான முறையில் வடிகான்கள் இல்லாமையினால் இவ்வாறு மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

மேலும் நேற்று இரவு தொடர்ச்சியாக பல மணி நேரம் பெய்த கன மழையின் காரணமாக மழைநீர் வீடுகளுக்குள் உள்புகுந்ததில் சிறுவர்கள்,பெண்கள்,கர்ப்பிணி தாய்மார்கள் இருக்கும் வீடுகளில் மக்கள் பெரிதும் அவஸ்தைப்பட்ட தாக தெரிவிக்கின்றனர்

மேலும் இவ்வாறு வீதிகள் புனரமைக்கப்படும் போது உரிய முறையில் வடிகான்கள் அமைத்து மழைநீர் வடிந்து ஓடக்கூடிய ஏற்பாடுகளை செய்து தருமாறும் சில வடிகான்கள் துப்பரவு செய்து பராமரிக்காமை யினாலும் இவ்வாறு மழை நீர் வீடுகளுக்குள் போவதை தடுக்குமாறும் உரிய அதிகாரிகளிடம் பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.திருகோணமலை நகரை அண்டிய தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

நேற்று (05) இரவு தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக திருகோணமலை நகரை அண்டிய பெரும்பாலான தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

திருகோணமலை நகரை அண்டிய மட்கோ,பாலையூற்று,ஜமாலியா,லவ் லேன்,செல்வநாயகபுரம் மற்றும் பல்லத்தோட்டம் ஆகிய பிரதேசங்களில் உள்ள தாமழை வெள்ள நீரினால் அப்பிரதேச மக்களின் அன்றாட செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு தாழ்நிலப் பிரதேசத்தை அண்டிய விதிகள் சில புனரமைக்கப்படாமலும் மேலும் சில விதிகள் புனரமைக்கப்பட்ட போதிலும் சரியான முறையில் வடிகான்கள் இல்லாமையினால் இவ்வாறு மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

மேலும் நேற்று இரவு தொடர்ச்சியாக பல மணி நேரம் பெய்த கன மழையின் காரணமாக மழைநீர் வீடுகளுக்குள் உள்புகுந்ததில் சிறுவர்கள்,பெண்கள்,கர்ப்பிணி தாய்மார்கள் இருக்கும் வீடுகளில் மக்கள் பெரிதும் அவஸ்தைப்பட்ட தாக தெரிவிக்கின்றனர்

மேலும் இவ்வாறு வீதிகள் புனரமைக்கப்படும் போது உரிய முறையில் வடிகான்கள் அமைத்து மழைநீர் வடிந்து ஓடக்கூடிய ஏற்பாடுகளை செய்து தருமாறும் சில வடிகான்கள் துப்பரவு செய்து பராமரிக்காமை யினாலும் இவ்வாறு மழை நீர் வீடுகளுக்குள் போவதை தடுக்குமாறும் உரிய அதிகாரிகளிடம் பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.