Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் கலைகட்டும் பொங்கல்...

 


ரவ்பீக் பாயிஸ் 

திருகோணமலை நகரில் நாளை பொங்கல் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் ஆர்வத்துடன் பொங்கல் கொண்டாடுவதற்கான பொருள் கொள்வனவில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருந்தது 

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த காலங்களில் வீடுகளில் இருந்து பொங்கல் தினத்தை கொண்டாடியிருந்தனர்

அதனை அடுத்து இவ்வருடம் மிகவும் ஆர்வத்துடன் பொருள் கொள்வனவில் ஈடுபடுவது அவதானிக்கக்கூடியதாக இருந்தது 

திருகோணமலை நகரை அண்டிய பிரதேசங்கள் மட்டுமல்லாது மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் இவ்வாறு இந்து மக்கள் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து இருந்தனர் 

இருந்தபோதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசிகள் பெரிதும் அதிகரித்துள்ளதாகவும் கவலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது 








Powered by Blogger.