திருமலையில் விற்பனை பிரதிநிதிகளுக்கான சங்கம் உதயம்...
இலங்கையின் முதல் தடவையாக விற்பனை பிரதிநிதிகளுக்கான சங்கம் திருகோணமலையில் திருமலை விற்பனை பிரதிநிதிகள் சமூகம் என்ற பெயரில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது
நேற்று (08) திருகோணமலை விபுலானந்தா கல்லூரி கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது
இச்சங்கம் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விற்பனை பிரதிநிதிகளை மையமாகக்கொண்டு சுமார் 170 க்கும் அதிகமான பிரதிநிதிகள் அங்கத்தவர்களாக இணைந்து இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது
திருகோணமலை மாவட்டத்தில் விற்பனைப் பிரதிநிதிகள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சனைகள்,சந்தையில் அவர்கள் தனிப்பட்ட முறையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் குடும்ப மட்டத்தில் எதிர்கொள்ளும் சவால்களை சரியாக இணங்காணப்பட்டு அதற்கான தீர்வினை இச் சங்கத்தின் ஊடாக பெற்றுக் கொடுப்பது நோக்கம் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது
இவ்வாறு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட விற்பனை பிரதிநிதிகளின் சங்கமானது சமூக நல்லிணக்க செயற்பாடுகளிலும் ஈடுபடஉள்ளதுடன் சங்கத்தின் நிறைவேற்று தலைவராக வி.சுமன்,உப தலைவராக எம்.றிபாஸ்,செயலாளராக எ.அம்ஜத்,உப செயலாளராக ஐ.திலீப்,பொருளாளராக எஸ்.சுஜித் மற்றும் சங்க நிர்வாக உறுப்பினர்களாக எஸ்.பரந்தாமன்,எம்.வாஜித்,எஸ்.துஷ்யந்தன் மற்றும் கே.பிரின்ஸ் ஆகியோர் விசேட அதிதிகள் முன்னிலையில் ஏகமனதாக தெரிவுசெய்யப்ட்டதுடன்
அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக விபுலானந்தா கல்லூரியின் அதிபர் ஜெரோம்,விசேட அதிதிகளாக ஹேமாஸ் நிறுவனத்தின் வடக்கு மாகாண முகாமையாளர் அறிவழகன்,மெலிபன் பாரல்மா நிறுவனத்தின் கிழக்குமாகாண விற்பனை நிர்வாகி எம்.ஆர்.எம் பாயிஸ், ஏர்டெல் நிறுவனத்தின் வடக்கு மாகாண முகாமையாளர் எம்.ரிஸ்வான் மற்றும் ஸ்கேன் நிறுவனத்தின் கிழக்கு மாகாண விற்பனை நிர்வாகி எம்.சியான் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன்
திருகோணமலை விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினால் விசேட அதிதிகளாக கலந்துகொண்டவர்களுக்கு நினைவு சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.