Header Ads

Breaking News
recent

சிறந்த பெண்ணாளுமை விருதினை பெற்ற இளம் பெண்ணாளுமை சாதனையாளர் மாத்தளையிலிருந்து தெரிவு...

(ADMIN)
கனடா விழித்தெழு பெண்ணே நிருவாகத்தின் ஏற்பாட்டில் சிறந்த பெண்ணாளுமை என்ற தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட விருது வழங்கள் நிகழ்வில் 100 பேர் கௌரவிக்கப்பட்டனர்

இதில் இளம் பெண்ணாளுமை சாதனையாளர் விருதினை மாத்தளை ஆமினா தேசிய பாடசாலையின் உயர்தர மனைவி கவிப்புயல் என்றழைக்கப்படும் பாத்திமா ஸஹ்ரா என்பவரும் பொண்ணாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.

இவரை பற்றி கூற வேண்டுமாயின் எழுத்தாற்றலை கையில் எடுத்து கவிப்புயலாக மாற்றம்பெற்று எழுத்துக்களை தன் காந்த குரலில் கலந்து எம் நாட்டில் மட்டுமல்லாது கடல் கடந்து பல தாயகங்களில் இவரது குரலின் மூலம் தடம்பதித்துள்ளார்.

மேலும் நாடுகளுக்கிடையில் நடாத்தப்படும் கவிதைப்போட்டிகளில் முதலிடம் பெற்றதும்,அவ்வாறான கவிதைப்போட்டிகளில் இவரும் நடுவராக பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தினறாலும் தன் சக உறவினர்களாலும் பல எதிர்ப்புக்கள் மற்றும் பின்னடைவுகள் கொடுக்கப்பட்டாலும் அதையனைத்தையும் தகர்த்தெறிந்து இன்றைய கால கட்டத்தில் பல கனவுகளோடு ஆசைகளோடு தன் திறமைகளை வெளிக்காட்ட நினைக்கும் பெண்களுக்கு முன்னுதாரணமாவர் என்றால் அது மிகையாகாது

மிகவும் இள வயது ஊடகவியலாளராக பல முகநூல் ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராக மற்றும் தொகுப்பாளராக சேவையாற்றியுள்ளார் என்பதுடன்

இவரால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற கவிப்புயல் எனும் இவரது யூட்டியூப் பக்கத்தினூடாகவும் கவிதை வாசித்தல் மற்றும் ஆவணப்படுத்தல் காணொளிகளும்,வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கும் தன் குரல் மூலம் உயிரூட்டி வருகின்றார்.

பலரது எதிர்ப்புக்கள் மற்றும் நிராகரிப்புக்களுக்கு மத்தியில் ஒரு இளம் பெண்ணாக இவ்வாறான ஓர் சாதனையை நிலைநாட்டுவது என்பது நிச்சயமாக பாராட்டத்தக்க விடயமே

ஒருவர் பல முயற்சிகள் செய்து முன்னேறிச்செல்ல முயலும் போது அதற்கான கௌரவத்தினை வழங்கி ஊக்கப்படுத்த எவறும் முன் செல்வதில்லை என்பதே நிதர்சனம்.அதுவே அவர் பாரிய அளவில் சாதனைகள் புரிந்து பலரால் பேசப்படும்போது மாத்திரம் அவரது வெற்றியினை பதாதைகளாக காண்பித்து ஊரார் ஒன்று கூடி அழைத்து வைந்து விழாக்கள் நடாத்தி பெரிதாக இன்பமடைந்துகொள்கின்றோம்

உண்மையில் அந்த வெற்றி யாருக்கு இன்பத்தினை கொடுக்க வேண்டும் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். திறமைகளுக்கு வயது ஓர் வரம்பல்ல வளர்ந்து வரும் சாதனையாளர்களை அவர்கள் வளரும்போதே ஊக்கப்படுத்தி கௌரவப்படுத்தி அவரது வெற்றிகளில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதனை முன்னிறுத்தி

உங்களது வாழ்வில் மேலும் பல வெற்றிகள் பெற்று உங்கள் திறமை உலகறிய வேண்டும் என்ற பிராத்தனையோடு MAX தமிழ் ஊடக வலையமைப்பு சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.






Powered by Blogger.