Header Ads

Breaking News
recent

நடைபெறவிருந்த பரீட்சைகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு...



(ADMIN)
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் நடைபெறவிருந்த பரீட்சைகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை வளாகத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

திருகோணமலை வளாகத்தில் குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் 324 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,வளாகத்தில் தங்கியிருந்த மாணவர்களுக்கு அதிக அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாணவர்கள் அதே விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இருந்த போதிலும் குறித்த மாணவர்களுக்கு பரீட்சைகள் இடம்பெற இருந்த நிலையில் பரீட்சைகள் நடாத்துவது குறித்து சுகாதார ஆலோசனைகளை வழங்கி உள்ளதாகவும் குச்சவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளரொருவர் குறிப்பிட்டார்.
Powered by Blogger.