Header Ads

Breaking News
recent

புலமைப்பரிசில் எழுதிய இரண்டு பேர் நீரில் மூழ்கிய பரிதாபம் : ஒருவர் உயிரிழப்பு மேலும் ஒருவரின் நிலமை கவலைக்கிடம்...

ரவ்பீக் பாயிஸ் 


திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்ககண்டி பாலத்துக்கு அருகில் நீரில் மூழ்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர் 

இன்று (22) பிற்பகல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இன்றைய தினம் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை எழுதிவிட்டு வகுப்பாசிரியருடன் 8 மாணவர்கள் கடலில் நீராட சென்றுள்ளதாகவும் அதில் இருவர் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 

இவ்வாறு உயிரிழந்த சிறுமி திருகோணமலை ஆண்டாங்குளம் பாசல்மாவத்தையை சேர்ந்த ஒய்னீ ஹன்சலா (வயது 10) எனவும் தெரியவந்துள்ளது 

மேலும் ஒரு சிறுமி அயோத்தியா (வயது 10) என்பவர் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது

உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.