Header Ads

Breaking News
recent

திருமலையில் உள்நாட்டு உற்பத்தி துப்பாக்கி ஒன்று மீட்பு..



ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளாங்குளம் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் உள்நாட்டு உற்பத்தி துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்

இன்று (08) திருகோணமலை சர்தாபுற விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இவ்வாறு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினை மீட்டுள்ளதுடன்

இவ்வாறு கைப்பற்றப்பட்ட துப்பாக்கியினை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.