குளிர் காலத்தை எதிர்கொள்ள ஒரு மரங்கொத்தியின் செயல்பாடு...
குளிர்காலத்தினை எதிர்கொள்ள ஒரு மரங்கொத்தி தன்னைத் தயார்செய்து கொள்வது மிகவும் ஆச்சரியமானது.. முதலில், அது ஒரு பட்டுப்போன மரத்தைக் கண்டுபிடித்து, ஏகோர்ன் கொட்டைகளை(Acorn/oak nuts)பதிப்பதற்கான துளைகளை உருவாக்கத் தொடங்குகிறது. ஒவ்வொரு துளையும் மிகவும் சிந்தனையுடன் ஏற்படுத்தப்படுகின்றது. ஏனென்றால் துளை பெரியதாக இருந்தால், மற்ற பறவைகள் எளிதாக அதனைத் திருடலாம். துளை குறுகலாக இருந்தால், அந்தக் கொட்டை உடைந்து சிதைந்துவிடும்.
கோடையின் முடிவில், மரங்கொத்தியின் இந்த செதுக்கு வேலை முடிவடைகிறது. இந்த நேரத்தில் ஏகோர்ன் கொட்டைகள் பழுத்து, மரத்தில் தங்கள் இடங்களை எடுத்துக்கொள்கின்றன.
ஒரு பெரிய மரத்தின் தண்டு சுமார் 50,000 ஏகோர்ன்களை வைத்திருக்கக் கூடியது. இது அந்த மரங்கொத்திக்கு திருப்திகரமான குளிர்காலத்தைக் கடக்க உதவுகின்றது…
ஒரு மரங்கொத்திப் பறவைக்கே தனது எதிர்கால நலனுக்காக இவ்வாறான முன்னாயத்தங்களை ஏற்படுத்திக்கொடுத்த இறைவன் எமக்கான எதிர்காலத்தை சிறப்பாக ஏற்படுத்துவான் என நம்பிக்கை கொள்வோம்.. தற்காலிக சுகங்களை விடுத்து எதிர்காலத்தை சிறப்பாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோம்.