Header Ads

Breaking News
recent

கிராமத்துடன் ஒரு உரையாடல் "ஒரு இலட்சம் வேலைத்திட்டம்" திருமலையில் இன்று அங்குரார்ப்பணம் : 1610 வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு...

ரவ்பீக் பாயிஸ்
கிராமத்துடன் ஒரு உரையாடல் "ஒரு இலட்சம் வேலைத்திட்டம்" தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ்வேலைத்திட்டங்கள் திருகோணமலை மாவட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது

நிகழ்வு இன்று (03) திருகோணமலை கந்தளாய் ராஜாஎல கல்லூரியில் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கபில நுவன் அத்துகோரள அவர்களின் தலையில் நடைபெற்றது.

மேலும் கிராமத்துடன் ஒரு உரையாடல் ஒரு இலட்சம் வேலைத்திட்டத்தின் ஒரு வேலைத்திட்டமாக ராஜாலா கல்லூரி வளாகத்தை சுற்றி சுவர் அமைக்கும் பணி, கல்லூரியின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குழாய் கிணறு அமைக்கும் பணியும் இன்று திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கபில நுவன் அத்துகோரள அவர்களின் தலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

இத்திட்டத்திற்கு சமாந்தரமாக திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி 1610 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளத்துடன்

இதற்காக 1565 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட வரலாற்றில் முதல் தடவையாக இவ்வளவு பெரிய நிதி தொகையை அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமெனவும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கபில நுவன் அத்துகோரள அவர்கள் தெரிவித்தார்

மேலும் இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோரள, கந்தளாய் பிரதேச செயலாளர் என்.எம். திருமதி உபேக்ஷா குமாரி, ராஜா எல பிரதேச பாராளுமன்ற உறுப்பினருமான திரு.திஸ்ஸ குமார, ராஜா எல கல்லூரியின் அதிபர் திரு.என்.பி.துஷார சம்பத், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.









Powered by Blogger.