அரசாங்கத்தின் 3மில்லியன் திட்டத்தின் கீழ் வாழ்வாதர பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு...
கிராமத்துடன் ஒரு உரையாடல் "ஒரு இலட்சம் வேலைத்திட்டம்" கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மூன்று மில்லியன் திட்டத்தின் கீழ் வாழ்வாதார பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கபட்டது
இவ் வேலைத்திட்டம் திருகோணமலை மார்க்கோ பிரதேசத்தில் இன்று (03) காலை 8.15மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
மேலும் கிராமத்துடன் ஒரு உரையாடல் ஒரு இலட்சம் வேலைத்திட்டத்தின் ஒரு வேலைத்திட்டமாக திருகோணமலை மார்க்கோ கிராமத்தின் எல்லை வீதியின் 50மீட்டர் தூரம் வீடு கான்க்ரீட் வீதியாக அமைப்பதட்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் அரசாங்கத்தின் 3மில்லியன் வேலை திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட வாழ்வாதர பயனாளிகளில் 5 வாழ்வாதர பயனாளிகளுக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது
இந்நிகழ்வில் திருகோணமலை பட்டணமும் சுழலும் பிரதேசசபை உறுப்பினர் பகார்தீன்,அபிவிருத்தி உத்தியோகத்தர் லோஜினி,கிராம உத்தியாகத்தார் காஞ்சனா,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ராஜினி மற்றும் பிரதேசத்தின் பல சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன்
இத்திட்டத்திற்கு நிகராக திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி 1610 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளத்துடன் இத்திட்டத்திற்க்காக 1565 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் திருகோணமலை மாவட்ட வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறு பெரும்தொகை நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.