Header Ads

Breaking News
recent

74வது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் திருமலையில் இடம்பெற்றது...


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74வது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளின் திருகோணமலை மாவட்ட சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றது

இன்று(4) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.


தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த முப்படை வீரர்களை நினைவு கூர்ந்து 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


அத்துடன் மாவட்ட செயலக வளாகத்தில் மர நடுகை நிகழ்வும் இதன்போது நடைபெற்றது.


இந்த நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் திணைக்களத் தலைவர்கள் உட்பட உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.





Powered by Blogger.