சடுதியாக அதிகரித்த இரும்பின் விலை!
தற்போது இரும்பு மெற்றிக் டன் ஒன்றின் விலையானது 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதென இரும்பு இறக்குமதியாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சந்தையில், இரும்பின் விலை உயர்வு மற்றும் டொலர் பற்றாக்குறை ஆகியன இதற்கான பிரதான காரணிகளாகும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக, கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.