ஜும்ஆ தொழுகையை சுருக்கி கொள்ளுமாறு வேண்டுகோள்...
தற்போது கல்வி பொதுத் தராதரப்பத்திர உயர்தரப்பரீட்சை (G.C.E. A/L) நடைபெற்று வருகின்றது. இதில் பங்கு கொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சிறந்த பெறுபேறுகளைப்பெற பிரார்த்திக்கின்றது.
குறித்த பரீட்சையில் கலந்து கொள்ளும் முஸ்லிம் மாணவர்களும், பரீட்சைக்கடமைகளில் ஈடுபடும் முஸ்லிம் ஆசிரியர்களும் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்வதால் பரீட்சை முடிவுறும் வரை வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பாக்களை சுருக்கிக் கொண்டு குத்பாவையும் தொழுகையையும் பிற்பகல் 12.55 மணிக்கு முன்னர் முடித்துக் கொள்ளுமாறு சகல கதீப்மார்களையும் இமாம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.