தேசிய சேமிப்பு வங்கியில் தீப்பரவல்!!
தேசிய சேமிப்பு வங்கியின் திருகோணமலை கிளையில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
திருகோணமலை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள தேசிய சேமிப்பு வங்கியின் திருகோணமலை கிளையில் நேற்று (05) அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
நேற்று காலை வங்கியிலிருந்து புகைமூட்டம் வெளிவந்த நிலையில் பொதுமக்களினால் திருகோணமலை நகரசபை தீயணைப்பு படையினருக்கு தகவல்கள் வழங்கியதை அடுத்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரியவருகிறது
தேசிய சேமிப்பு வங்கியின் திருகோணமலையில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை மாத்திரம் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் இருப்பதாகவும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமைக்கு அமர்த்தப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில் தீப் பரவலுக்கான காரணம் வெளிவராத நிலையில் வங்கியின் ஒரு பகுதி தீப்பற்றி உள்ளதாகவும் தெரியவருகின்றது
தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தீப் பரவல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.