Header Ads

Breaking News
recent

நாட்டுக்குள்ளேயே முழுமையான சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அவதானம்


நாட்டில் சீமெந்து தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்குத் தீர்வு காணும் வகையில் எதிர்காலத்தில் நாட்டுக்குள்ளேயே முழுமையான சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த இரண்டு வருடக்காலப் பகுதியில் நிர்மாணத்துறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் எவையும் காணப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மருந்துப் பொருட்கள் தவிர்ந்த பல பொருட்களுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கொண்டு தேவையற்ற பயன்களை அடைய முயல வேண்டாமென வர்த்தகர்களிடம் நிதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Powered by Blogger.