Header Ads

Breaking News
recent

இலங்கையில் மூடப்பட்ட நூற்றுக்கணக்கான பேக்கரிகள்! செய்திகளின் தொகுப்பு


பேக்கரி தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக அனைத்து பேக்கரி உரிமையாளர்களும் அநாதரவான நிலையில் உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி தொழிலை இனிமேலும் கொண்டு நடத்த முடியாது எனவும், சுமார் 200 - 300 சிறிய பேக்கரிகள் முற்றாக மூடப்பட்டு அவற்றின் உபகரணங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் உள்ள 7000 பேக்கரிகளில் சுமார் 4000 பேக்கரிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பாணை உற்பத்தி செய்வதாகவும், கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு, பாம் ஓயில், தேங்காய் எண்ணெய் மற்றும் மாஜரின் விலை உயர்வு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
Powered by Blogger.