கிரவெல் அகழ்விற்கு எதிராக எதிர்ப்பு போராட்டம்....
திருகோணமலை- மொரவெவ பிரிவுக்கு உட்பட்ட எத்தாபெந்திவெவ பகுதியில் கிரவெல் அகழ்விற்கு எதிராக இன்று (09) எதிர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொண்டனர்.
ரொட்டவெவ-எத்தாபெந்திவெவ வீதி பல வருடங்களாக புனரமைக்கப்படாத நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு புணரமைப்பு செய்யப்பட்டதாகவும் தற்போது அவ்வீதியினூடக கிரவெல் ஏற்றிக்கொண்டு டிப்பர் வாகனங்கள் அதிகளவில் செல்வதாகவும் இதனால் வீதிகள் சேதம் அடைவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியை பாதுகாக்கும் நோக்கில் வீதியினூடக டிப்பர் வாகனங்களை கிரவெல் ஏற்றிக்கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் தொடர்ச்சியாக இவ்வீதியால் டிப்பர் வாகனங்கள் செல்வதால் பாடசாலை மாணவர்களை பகுதிநேர வகுப்பிற்கு கூட அனுப்ப முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள மக்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆகவே உடைந்து காணப்படுகின்ற வீதியை புனரமைத்த பின்னர் கிரவெல் அகழ்விற்கு அனுமதி வழங்குமாறும் அதுவரை தற்காலிகமாக இடைநிறுத்தமாறும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் கிரவெல் அகழ்வு தொடர்பில் அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்து சட்டரீதியாக தங்களது கடமைகளை செய்வதாகவும் மக்கள் தேவையற்ற விதத்தில் கூட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்ததையடுத்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.