Header Ads

Breaking News
recent

புகழ்பெற்ற பிரபல நடிகர் திடீர் மரணம்..


பழம்பெரும் நடிகரான பிரவீன் குமார் சோப்தி (74) மாரடைப்பினால் காலமானார். இவர் தூர்தர்ஷன் சேனலில் மகாபாரத தொடரில் பீமாக நடித்து ரசிகர்களிடையே பயங்கர பிரபலமானவர்.

மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்ற ராமாயணம், மகாபாரதம் தொடர் 1988ம் ஆண்டில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது.

இதில் மகாபாரத தொடரில் ‘பீமன்’ கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் பிரவீன் குமார் சோப்தி. குறித்த சீரியலுக்கு பின்பு 50 க்கும் மேற்பட்ட பல்வேறு மொழிபடங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் ”பீம் பாய்” கதாபாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர் ஆவார். டெல்லியில் வசித்து வந்த இவருக்கு கடந்த 7ம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.

எல்லை பாதுகாப்பு படை வீரராக தனது இளமை கால வாழ்க்கையை துவக்கி, தடகள விளையாட்டில் ‘வட்டு’ எறிதலில் சிறந்த வீரராக திகழ்ந்த, இவர் ஆம் ஆத்மியில் இணைந்தார்.

நடிகர் பிரவீன் குமார் சோப்தி மறைவை அறிந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




Powered by Blogger.