Header Ads

Breaking News
recent

அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் ஒருவர் கைது


சட்டவிரோதமான முறையில் அரிய வகை வெள்ளை நிற கழுகு ஒன்றை வளர்த்து வந்த நபர் ஒருவர் புத்தளத்தில் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பாலாவி இரண்டாம் கட்டை பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த வீட்டில் சோதனை செய்த போதே சந்தேக நபர் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து (WHITE BELLIED SEA EAGLE ) HALIEETUS LEUCOGWTER இனத்தைச் சேர்ந்த அரிய வகை வெள்ளை நிற கழுகு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த அரிய வகைக் வெள்ளை நிற கழுகு விற்பனை செய்வதற்காக சந்தேக நபர் வீட்டில் வைத்து வளர்த்து வந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாரும், புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.