Header Ads

Breaking News
recent

இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு


தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ள கெரவலபிடிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை இன்று பிற்பகல் அளவில் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க கூடியதாக இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்த களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தை நேற்று பிற்பகல் தேசிய கட்டமைப்புடன் இணைத்ததாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்தது.

கெரவலபிடிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்று பிற்பகல் செயலிழந்த நிலையில் இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்பிற்கு 270 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டிருந்தது.

அதேபோல், 130 மெகாவோட் மின்சார இழப்பு களனிதிஸ்ஸ மின்சார உற்பத்தி நிலையத்தில் இருந்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.