திருமலையில் இடம்பெற்ற காணி உரிமம் மற்றும் காணி பிணக்கு தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு...
திருகோணமலையில் காணி உரிமையும் சட்டங்களும், காணி பிணக்குகள் தொடர்பான தெளிவூட்டல் பயிற்சி செயலமர்வு ஒன்று இடம்பெற்றது
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 65 இளைஞர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களின் பங்குபற்றுதலுடன் AHRC நிறுவனத்தினால் நேற்று திருகோணமலை குளக்கோட்டம் மண்டபத்தில் இடம்பெற்றது
இந்நிகழ்வு AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கும், சிவில் செயற்பாட்டாளர்களுக்கு உரிமைசார் தெளிவினையும் ஆளுமையினையும் வழங்கும் நோக்கில் குறித்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன்
AHRC நிறுவனத்தினால் இரன்டாம்; தலைமைத்துவத்தினை ஏற்படுத்தலும், சமூக மாற்றத்திற்காகவும், நல்லினக்கம் கொண்ட சமூக கட்டமைப்பினை உருவாக்குவதற்காகவும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்களை வலுப்படுத்தி வருகின்றது.
மற்றும் மாற்றத்திற்கான இளைஞர் கூட்டமைப்பு எனும் இளைஞர் அமைப்பு உருவாக்கப்பட்டு இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இச் செயலமர்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும், குச்செவெளி, மூதூர், கிண்ணியா, தம்பலகாமம் மற்றும் மொறவெவ ஆகிய பிரதேசங்;களில் இருந்து 65 இளைஞர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டதுடன் இச் செயலமர்வில் வளவாளராக சட்டத்தரணி திருமதி மயூரி ஜனன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.