Header Ads

Breaking News
recent

மாற்றத்திற்கான இளைஞர் கூட்டமைப்பு அங்குராப்பணம் நிகழ்வும் சர்வதேச மகளீர் தின கொண்டாட்டமும்...

ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து செயற்பட்டுவரும் மாற்றத்திற்கான இளைஞர் கூட்டமைப்பின் அங்குராப்பணம் நிகழ்வும் சர்வதேச மகளீர் தின நிகழ்வும் இன்று(13) திருகோணமலை மாவட்ட நகராட்சி மன்ற ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது மாற்றத்திற்கான இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் செல்வி.சுமையா மௌயூத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாற்றத்திற்கான இளைஞர் கூட்டமைப்பின் அங்குராப்பணம் வைபவமானது தம்பலகமம் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயகௌரி சிறிபதி அவர்களின் தலைமையில் அங்குராப்பணம் செய்துவைக்கப்பட்டது

அதனை தொடர்ந்து பெண்களின் கலைநிகழ்வும் இடம் பெற்றதோடு, இறுதியாக சட்டத்தரணி செல்வி. பிரசாந்தினி உதயகுமார் அவர்களால் இளைஞர்களுக்கு “ பாராபட்சத்தை உடைத்தெறிதலும் சமத்துவத்தினை மதித்தலும்” எனும் தலைப்பில் செயலமர்வும் மாற்றத்திற்கான இளைஞர் வலையமைப்பினரால் நடாத்தப்பட்டது

மற்றும் எதிர்காலத்தில் இவ் இளைஞர் வலையமைப்பினரால் கிராமங்களில் புதைந்து கிடக்கும் இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் செயற்றிட்டங்களை மேற்க்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன்

இந்நிகழ்வில் தம்பலகமம் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயகௌரி சிறிபதி அவர்கள் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினர்களாக சட்டத்தரணி செல்வி.பிரசாந்தினி உதயகுமார், திருகோணமலை மாவட்ட சுமூக சேவைகள் உத்தியோகத்தர் திருமதி.ஜெயசீலன் சுகந்தினி,அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் திரு.கண்டுமணி லவகுசராசா, திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக இளைஞர் சேவை மன்ற அதிகாரி திரு.அலாவுதீன் பாவு, அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் திரு.அழகுராசா மதன், மற்றும் மாற்றத்திற்கான இளைஞர் கூட்டமைப்பின் செயலாளர் செல்வி.ஸ்டான்லி அனுஜா, பொருளாளர் செல்வி.பிரியாழினி ரவிச்சந்திரன் உட்பட இளைஞர் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















Powered by Blogger.