Header Ads

Breaking News
recent

சம்மாந்துறையில் தீ அணைப்பு பயிற்சி முகாம் இன்று - படங்கள் இணைப்பு

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனிபா அவர்களின் ஆலோசனையிலும் உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம் அவர்களின்
வழிகாட்டுதலுக்கமைய சம்மாந்துறை அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு என்பவற்றின் ஏற்பாட்டில் அரச நிறுவனங்களில் உள்ள உத்தியோகத்தர்களுக்கான தீயணைப்பு சம்பந்தமான செயலமர்வு இன்று (22) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதோடு இதற்கான களப்பயிற்சி சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் உள்ள எம் பி சி எஸ் வளாகத்தில் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி பணிப்பாளர் எம்.எ.சி.ரியாஸ்,சம்மாந்துறை பிரதேசத்திற்குப் பொறுப்பான தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களான எம்.எஸ்.எம். அஸாறுடீன் மற்றும் எம்.எ.எம். நபீஸ்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் , அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான இராணுவ 241 வது கட்டளை பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் இதற்கான முழு ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.








Powered by Blogger.