Header Ads

Breaking News
recent

கிளிவெட்டி முத்துமாரியம்மன் கோயிலை அளக்க முற்பட்ட தொல்லியல் துறையும் அதை தடுத்து நிறுத்திய ஊர்மக்களும்...

தி.பிரபா
எமக்கு நினைவு இருந்த காலம் தொட்டு முத்துமாரியம்மன் கோயிலானது அவ்விடத்திலேயே அமையப்பெற்றிருந்ததை நாங்களறிவோம் அதையொட்டி அமைந்துள்ள வீதிக்கும் முத்துமாரியம்மன் கோயில் வீதி எனவும் அழைக்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்த உண்மை தற்போது கடந்த நான்கு மாதங்களுக்கு முன் வந்திருந்த தொல்லியல் திணைக்களம் இது தொல்லியல் திணைக்களத்திற்குட்பட்ட இடம் இதை அளந்து எல்லையிட வேண்டுமென கூறிச்சென்றுள்ளனர்.

ஊர்மக்கள் அதை பெரிதாக அளட்டிக்கொள்ளாத நிலையில் இது தொடர்பாக மூதூர் பிரதேச செயலகத்திற்கு இவ்விடயத்தை ஊரார் தெரியப்படுத்தியுள்ளனர்.




தற்போது மீண்டும் அக்கோயிலை அளக்க தொல்லியல் திணைக்களத்தினர் இன்று வருகை தந்தபோதும் இதையறிந்ந மக்கள் ஒன்றுபட்டு அவர்களுக்கு தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.




இதையடுத்து வருகை தந்தோர் அளக்காது திரும்பி சென்றுள்ளனர்.




இதைப் பார்க்கும்போது முன்கதவால் தமிழ் தேசிய கூட்டமைப்பை பேச அழைக்கும் அரசாங்கம் பின்கதவால் தமிழரின் தாய்நிலங்களை தொல்லியல் துறையை வைத்துக்கொண்டு கையகப்படுத்தும் நயவஞ்சக வேலைகளை பார்க்கின்றமை தெளிவாகின்றது இப்படியான அரசோடு கதைப்பதால் பயனில்லை என ரெலோவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கூறி அந்த பேச்சுக்களில் கலந்துகொள்ளாததும் எவ்வளவு தூரம் சரியான செயலெனவும்,ய உண்மையானதெனவும் அவர்களது நயவஞ்சக நடவடிக்கைமூலம் உடனடியாகவே வெளிப்பட்டுள்ளதையும் அரசின் உண்மை முகத்தையும் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.




அரசினது இவ்வாறான செயல்கள் 30 வருட கடும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வீனான ஒரு குழப்பத்தை மீண்டும் ஏற்படுத்தி அவர்களது நாளாந்த கடமைகளைக்கூட நிம்மதியாக செய்யமுடியாத ஒரு ஸ்திரமற்ற நிலைக்கும் மன அழுத்தங்களுக்கும் கொண்டு செல்கின்ற ஒரு செயலெனவும்.

இது ஒரு மனித உரிமை மீறப்படுகின்ற செயலெனவும் இவ்வாறான செயற்பாடுகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் மக்கள் கோருகின்றனர்






Powered by Blogger.