திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்...
மட்டக்களப்பு பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு திடீரென தீப்பற்றி எறிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்பிவிட்டு மோட்டார் சைக்கிளினினை செலுத்த ஆயத்தமானபோது பெற்றோல் தாங்கியிலிருந்து வெளியாகிய பெட்ரோல் கசிவினால் குறித்த தீப்பரவல் ஏட்பட்டுள்ளதாக தெரியவருகின்றது
தீப்பற்றிய குறித்த .மோட்டார் சைக்கிளினை பொதுமக்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டதுடன் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் பகுதியளவில் தீப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது