Header Ads

Breaking News
recent

திருமலையில் கோவிட் தொற்றினால் மேலும் ஒரு மரணம் பதிவு...



ADMIN
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கோவிட் தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது


அதன்படி இன்று (24) குறித்த மரணம் பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது


திருகோணமலை பிரதான வீதியைச் சேர்ந்த (வயது 63) பெண் ஒருவரே இவ்வாறு கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது


அதன்படி உயிரிழந்த குறித்த பெண் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் இன்று காலை சுகயீனம் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது


இவ்வாறு உயிர் இறந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனையிலேயே கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்
Powered by Blogger.