Header Ads

Breaking News
recent

அரசாங்கம் வழங்கும் ஒரு இலட்சம் ரூபாய் நாய்க்கும் தேவைப்படாது : வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கம்....



 ரவ்பீக் பாயிஸ்

திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்ட நபர்களுக்கு அரசாங்கம் வழங்கும் ஒரு இலட்சம் ரூபாய் நாய்க்கும் தேவைப்படாது என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.


திருகோணமலை பாலையூற்று பகுதியில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற கட்டடத் தொகுதி ஒன்றைத் திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இறப்பு சான்றிதழ் மற்றும் அவர்களுக்கான நஷ்ட ஈடாக ஒரு லட்சம் ரூபா வழங்க அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்  பெற்றோர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

கடந்த பல வருடங்களாக அரசாங்கம் தங்களை ஏமாற்றி வருவதாகவும்  அரசினால் வழங்கப்படும் நிதி தமக்கு வேண்டாம் எனவும் தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச நீதி மாத்திரமே தமக்கு வேண்டுமெனவும் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுத்தொடர் சந்தர்ப்பத்தின் போது சர்வதேசத்திற்கு இவ்விடயத்தை வலியுறுத்துவதாக இதன்போது  சுட்டிக்காட்டினர்.

மேலும் அரசாங்கத்தினால் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபா பணம் எமது வீட்டு நாய்க்கு போட்டால் கூட அது சாப்பிடாது அவ்வாறு நாய் பணத்தை சாப்பிட்டால் தாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வரும் குறித்த வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும் திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தின் செயலாளர் அண்ணாமலை முருகையா இதன்போது சுட்டிக்காட்டினார்.
Powered by Blogger.